Tuesday, April 20, 2010

நட்புக்குள் ஒரு பிரிவு!!

விளையாட்டு வினையாகும் என்பார்கள்!!
Carrom விளையாட்டு தந்த நட்பு,
வினையாக வந்த "get lost" என்ற வார்த்தையை விளையாட்டாக சொல்ல,
இனித்த எங்கள் நட்பை கசக்கவைத்து,
முறித்து!!
காதலி பிரிவை கூட ஏற்ற இந்த மனம்,
ஏனோ நட்பின் வலியை ஏற்க மறுக்கிறது...
நாம் 1000 சிற்பிகளை எடுத்தாலும்,
ஏதோ ஒன்று இரண்டில் மட்டுமே முத்து கிடைக்கிறது,
கிடைத்ததை பத்திரமாக வைப்பவன் சாமர்த்தியசாலி!!
தொலைத்த நான் ஒரு சந்தோசம் இல்லாத கோமாளி!!
தேடி சென்று அடைய நட்பு ஒன்றும் பொக்கிஷம் அல்ல,
இனி தேடினாலும் என்னால் அடைய முடியாத புண்ணியமே அது!!
காலை பூத்த மலராக இருந்த எங்கள் நட்பு,
கதிரவன் மறையும் முன்னே கருகியதே!!
சோலையில் இரு குயில்களாய் இருந்த நாங்கள்,
மனக்கசப்பில் பிரிந்த மனிதர்கள் ஆனோமே இன்று,
கடல் படர்ந்த இந்த உலகில் நான்,
கடல் தாண்டி போனாலும்,
இனி ஒரு தோழி அவள் போலே இல்லை எனக்கு!!

அன்று வள்ளுவன் சொன்ன குறள்,
யாகாவராயினும் நா காக்க!!
இன்று இந்த வாலிபன் சொல்லும் குறள்,
யாகாவராயினும் நட்பும் சேர்த்து காக்க!!

நேரில் சென்று மன்னித்துவிடு என்று சொல்ல மனம் துடிக்கிறது,
ஆனால் அவள் என்ன பதில் தருவளோ என்று
தயங்குகிறது!!

காத்திருக்கேன் அவளுக்காக!!!

2 comments:

  1. konjam overa iruku thambi......ora azhuga padam.....story...ah maathu.....

    ReplyDelete
  2. ni yen pesamata??? hmmm... en kanney enai kuthukirathey!!! :-P

    ReplyDelete